text stringlengths 1 15.6k |
|---|
முதற் பக்கம் |
கட்டிடக்கலை |
கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் மற்றும் அதன் உடல் கட்டமைப்புகளை வடிவமைத்தல், செயல்முறைத் திட்டமிடல், மற்றும் கட்டிடங்கள் கட்டுவதை உள்ளடக்கியதாகும். கட்டடக்கலை படைப்புகள், கட்டிடங்கள் பொருள் வடிவம், பெரும்பாலும் கலாச்சார சின்னங்களாக மற்றும் கலை படைப்புகளாக காணப்படுகின்றது. வரலாற்று நாகரிகங்கள் பெரும்பாலும் அவர்களின் கட்ட... |
ஒரு விரிவான வரைவிலக்கணம், பெருமட்டத்தில், நகரத் திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் நிலத்தோற்றம் முதலியவற்றையும், நுண்மட்டத்தில், தளபாடங்கள், உற்பத்திப்பொருள் முதலியவற்றை உள்ளடக்கிய, முழு உருவாக்கச் சூழலின் வடிவமைப்பைக் கட்டிடக்கலைக்குள் அடக்கும். |
மேற்படி விடயத்தில், தற்போது கிடைக்கும் மிகப் பழைய ஆக்கம், கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமானியக் கட்டடக் கலைஞரான விட்ருவியஸ் என்பாரது "கட்டிடக்கலை தொடர்பில்", என்ற நூலாகும். இவரது கூற்றுப்படி, நல்ல கட்டிடம், அழகு, உறுதி, பயன்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும். மேற்படி மூன்றும், ஒன்றின்மீதொன்று அளவுமீறி ஆதிக்க... |
கட்டிடக்கலை, கணிதம், அறிவியல், கலை, தொழில்நுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம், பொன்றவற்றுடன் தொடர்புள்ள, ஒரு பல்துறைக் களமாகும். விட்ருவியசின் சொற்களில், "கட்டிடக்கலையென்பது, வேறுபல அறிவியல் துறைகளிலிருந்து எழுவதும், பெருமளவு, பல்வேறுபட்ட அறிவுத்துறைகளினால் அலங்கரிக்கப்பட்டதுமான ஒரு அறிவியலாகும்: இதன் உதவ... |
லியொன் பட்டிஸ்டா ஆல்பர்ட்டி என்பவர் தான் எழுதிய நூலொன்றில் விட்ருவியசின் கருத்துக்களை விரிவாக்கினார். அலங்காரங்களும் அழகுக்குப் பங்களிப்புச் செய்த போதிலும், அழகு என்பது, அளவுவிகிதம் (proportion) தொடர்பிலானது என்று இவர் எழுதினார். ஆல்பர்ட்டியின் கருத்துப்படி ஒரு முறையான உடலமைப்புக் கொண்ட மனிதனின் உடலின் அளவுவிகிதங்களைக்... |
19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலக் கலைத் திறனாய்வாளரான ஜான் ரஸ்கின் என்பவர் 1849 வெளியிட்ட "கட்டிடக்கலையின் ஏழு விளக்குகள்" என்னும் நூலில், "கட்டிடக்கலை என்பது அதனைக் காண்போருக்கு உள நலத்தையும், ஆற்றலையும், இன்பத்தையும் தரக்கூடிய வகையில், அமைத்து, அலங்கரித்து உருவாக்கப்பட்ட கட்டிடங்களாகும்" என்றார். ரஸ்கினுக்கு, கட்டிடக்கலைய... |
ஒரு கட்டிடக்கலை சார்ந்த கட்டிடத்துக்கும், சாதாரண கட்டிடத்துக்கும் உள்ள வேறுபாடு பலரதும் கவனத்தை ஈர்க்கின்ற விடயமாக இருந்துவருகின்றது. இது குறித்து எழுதிய பிரபலமான பிரெஞ்சுக் கட்டிடக்கலைஞரான லெ கொபூசியே, "நீங்கள், கற்கள், மரம், காங்கிறீட்டு என்பவற்றைக் கொண்டு ஒரு வீட்டையோ மாளிகையையோ அமைக்கலாம். அது கட்டுமானம். ஆனால் ஆக்... |
19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர் லூயிஸ் சலிவன் கட்டிடக்கலை வடிவமைப்பில் புதிய நோக்கு ஒன்றை வளர்ப்பதற்கு முயற்சித்தார். செயற்பாட்டுத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நோக்குக்கு அமைய "செயற்பாட்டுத் தேவைகளிலிருந்தே வடிவம் உருவாகின்றது" (Form follows function) என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. செயற்... |
பல கட்டிடக்கலைஞர்கள் கோட்பாட்டை ஒதுக்கித் தள்ளினாலும், செயல்முறையை (practice) வளம்படுத்துவதில் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. விட்ருவியஸ் தொடர்ந்து சொன்னபடி, "செய்முறையும், கோட்பாடும் கட்டிடக்கலையின் பெற்றோருக்குச் சமம். செயல்முறை என்பது, கொடுக்கப்பட்ட வேலைகளை நடைமுறைப்படுத்தும் முறைகளைக் கைக்கொள்ள... |
கட்டிடக்கலையென்பது, ஆரம்பத்தில், தேவைகளுக்கும், (உகந்த சூழல், பாதுகாப்பு என்பன) Means (கிடைக்கக் கூடிய கட்டிடப்பொருள்கள், தொழில் நுட்பம் முதலியன) என்பவற்றுக்கிடையிலான இயக்கப்பாடுகளிலிருந்து பரிணமித்ததாகும். தொல்பழங்கால, பழங்காலக் கட்டிடங்கள் இவ்வகையைச் சேர்ந்தனவாகும். மனித முன்னேற்றத்துடன், அறிவுத்துறைகளும், வாய்மொழி ம... |
முற்கால மனிதர் குடியிருப்புகள் கிராமம் சார்ந்தவையாகும். உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டபோது கிராமச் சமுதாயங்கள் நகர்சார் சமுதாயங்களாக வளர்ச்சி பெறத்தொடங்கின. கட்டிடங்கள் அதிக சிக்கலானவையாக ஆனதுடன், அவற்றின் வகைகளும் அதிகரித்தன. வீதிகள், பாலங்கள் போன்ற குடிசார் கட்டுமானங்களும், பாடசாலைகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதி... |
கட்டிடக்கலையின் வரலாற்றில் பாரிய கட்டுமானங்களைக் கட்டிய மிகப் பழைய நாகரிகங்களுள் ஆப்பிரிக்காவின் நைல் ஆற்றங்கரையில் உருவாகிச் செழித்த எகிப்திய நாகரிகம் முதன்மையானது. இம் மக்கள் மிகப் பெரிய பிரமிட்டுகளையும், கோயில்களையும் உருவாக்கினர். பல வரலாற்றாளர்களும் உலகக் கட்டிடக்கலை வரலாற்றின் தொடக்கத்தை இங்கிருந்துதான் தொடங்குகி... |
தற்கால ஈராக்கிலுள்ள யூபிரட்டீஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகளுக்கு இடையேயுள்ள பகுதியில் செழித்து வளர்ந்த மெசொப்பொத்தேமிய நாகரிகம், உலகக் கட்டிடக்கலை வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புக்களைச் செய்த இன்னொரு தொன்மையான ஆசிய நாகரிகம் ஆகும். மெசொப்பொத்தேமிய ஆற்றுப்படுக்கையிலும், மேற்கு ஈரானியப் பீடபூமியிலும் கட்டப்பட்ட சிகுரட் எனப்படும... |
பண்டைக் கிரேக்க நாகரிகம் கிமு 1900 தொடக்கம் கிமு 133 வரையான காலப்பகுதியில் செழித்திருந்தது. ஆனால் இதன் தாக்கம் இன்றுவரை மேற்கு நாட்டுப் பண்பாட்டில் உணரப்பட்டு வருகிறது. கிரேக்கர்கள் உலகக் கட்டிடக்கலைக்குப் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். இக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுள் முதன்மையானவை கோயில்கள் ஆக... |
கிரேக்கக் கட்டிடக்கலையில் ஒழுங்குகள் எனப்படும் மூன்று விதமான பாணிகள் பயன்படுத்தப்பட்டன. இவை டொரிக், அயனிக், கொறிந்தியன் என அழைக்கப்பட்டன. ஒழுங்குகள் என்பன தூண்களின் அமைப்பு, அவற்றின் அளவுவிகிதங்கள், அலங்காரங்கள், அவற்றால் தாங்கப்படும் வளைகளின் அமைப்பு அலங்காரம் முதலியவை தொடர்பானது. |
ரோமர் காலம் கிமு முதலாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. ரோமர்களின் கட்டிடக்கலை ஓரளவுக்குக் கிரேக்கக் கட்டிடக்கலையின் தொடர்ச்சியே எனினும் ரோமர் காலத்தில் கட்டிடக்கலையில் பெருமளவு வளர்ச்சிகள் ஏற்பட்டன. ரோமர் புத்தாக்கத் திறனும், கட்டிடப்பொருள்கள் பற்றிய நல்ல அறிவும் கொண்டிருந்தனர். இயற்கையாகக் கிடைத்த கற்கள் முதலியவற... |
கட்டிடக்கலை ஒழுங்குகளைப் பொறுத்தவரை ரோமர் மேலும் இரண்டு ஒழுங்குகளைப் பயன்படுத்தினர். இவை கூட்டு ஒழுங்கு, டஸ்கன் ஒழுங்கு என்பவையாகும். |
"ரெனசான்ஸ்" என்று அழைக்கப்பட்ட, மறுமலர்ச்சிக் காலகட்டத் தொடக்கத்துடன், சமயத்தைவிட மனிதசமுதாயமும், தனிப்பட்டவர்களும், முதன்மை பெறத் தொடங்கியமையும், அக்காலத்திலேற்பட்ட முன்னேற்றமும், அதன் பெறுபேறுகளும், கட்டிடக்கலைத்துறையில் புதிய அத்தியாயமொன்றுக்கு அடிகோலின. கட்டிடக்கலை தொடர்பில், தனிப்பட்ட கட்டிடக்கலைஞர்கள் பெருமைப்படு... |
கட்டிடம் சார்ந்த தேவைகளின் அதிகரிப்பு, அவை தொடர்பான பெருமளவு அறிவு வளர்ச்சி என்பவற்றோடு, புதிய கட்டிடப்பொருட்களின் அறிமுகம், தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்பனவும் சேர்ந்து கட்டிடத்துறையினுள் பல்வேறு தொழிற்பிரிவுகள் உருவாக வழி சமைத்தன. கூடிய தொழில் நுட்ப அம்சங்களை எடுத்துக்கொண்டு பல்வேறு பொறியியற் துறைகள் பிரிந்துபோகக் ... |
இதற்கிடையில், தொழிற்புரட்சி தொகையான நுகர்வுக்கான பாதையைத் திறந்துவிட்டதுடன், ஒருகாலத்தில் விலையுயர்ந்த கைவினைத்திறனோடு சம்பந்தப்பட்டிருந்த அலங்காரப் பொருட்கள், இயந்திர உற்பத்தியின் கீழ் மலிந்ததன் காரணமாக, அழகியல் மத்தியதர மக்கள் மட்டத்திலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியது. எனினும், உற்பத்தி வழிமுறைகளின் வெளிப்பாடுக... |
இவ்வாறான ஒரு பொதுவான நிலைமையினால் உருவான திருப்தியின்மை, 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல புதிய சிந்தனைப் பாதைகளுக்கு வித்திட்டது. கட்டிடக்கலையைப் பொறுத்தவரை இது நவீன கட்டிடக்கலைக்கு முன்னோடியாக அமைந்ததெனலாம். சிறந்த தரத்தையுடைய இயந்திர உற்பத்திப் பொருட்களை உற்பத்திசெய்வதற்காக உருவாக்கப்பட்ட டொய்ச் வேர்க்பண்ட் (Deut... |
முதன்முதலில் நவீன கட்டிடக்கலை பயிலப்படத் தொடங்கியபோது, அது, தார்மீக, தத்துவ, அழகியல் அடிப்படைகளிலமைந்த, ஒரு முன்னோடி இயக்கமாக இருந்தது. வரலாற்றை நிராகரித்து, வடிவத்தை உருவாக்கும் காரணியாகச் செயற்பாட்டை (function), கருதியதுமூலம் உண்மையைத் தேட முயற்சிக்கப்பட்டது. கட்டிடக்கலைஞர்கள் பிரபலமனார்கள். பின்னர், நவீன கட்டிடக்கலை... |
நவீனத்துவக் கட்டிடக்கலைஞர்கள், கட்டிடங்களை அவற்றின் அடிப்படையான வடிவங்களுக்கு எளிமையாக்க முயன்றனர். இவர்கள் கட்டிடங்களில் அலங்காரங்களை நீக்கிவிட்டனர். உருக்குத் தூண்கள், வளைகள், காங்கிறீற்று மேற்பரப்புக்கள் போன்ற தங்கள் உண்மையான அமைப்புக்களை வெளிப்படுத்தும் கட்டிடங்கள் அலங்காரங்கள் இன்றித் தம்மளவிலேயே அழகானவையாகக் கருத... |
எனினும், நவீன கட்டிடக்கலையில் ஒரு தரக்குறைவு ஏற்பட்டிருப்பதை, 1960களிலிருந்து, பொதுமக்கள் உணர ஆரம்பித்தனர். கருத்தின்மை, வரட்சித்தனம், அழகின்மை, ஒருசீர்த்தன்மை மற்றும் உளவியற் தாக்கங்கள் என்பன இந்நிலைக்குக் காரணமாகக் காட்டப்பட்ட சில விடயங்களாகும். |
கட்டிடக்கலையில் இருக்கவேண்டிய ஆழத்தைத் தியாகம் செய்துவிட்டு, வெளித்தோற்ற அளவில் பொதுமக்களைக் கவரக்கூடிய கட்டிடங்களைக் கொடுக்கும் பாதையொன்றைக் கைக்கொள்வதுமூலம், மேற்கூறிய நிலைமைக்குப் பதிலளிக்கக் கட்டிடக்கலைத் துறை முயன்றது. இது பின்நவீனத்துவம் (Postmodernism) என அழைக்கப்பட்டது. உள்ளே செயல்பாடுகளுக்கு உகந்தபடியான வடிவமை... |
கட்டிடக்கலைத் துறையின் இன்னொரு பகுதியினரும், கட்டிடக்கலைஞரல்லாதோர் சிலரும், பிரச்சினையின் அடிப்படை என்று அவர்கள் கருதிய விடயங்களுக்குத் தீர்வுகாண்பதன் மூலம் இப் பிரச்சினையை அணுக முயன்றனர். கட்டிடக்கலையென்பது, தனிப்பட்ட கட்டிடக்கலைஞர்கள் தங்கள் விருப்பங்கள், தத்துவங்கள் அல்லது அழகியல் நோக்கங்களை அடைவதற்கான ஒன்றல்லவென்று... |
மேலும் பல பிரச்சினைகள் அடையாளம் காணப்படத் தொடங்கியபோது, கட்டிடச் சேவைகள் போன்ற அம்சங்கள் தொடர்பில், கட்டிடங்களின் சிக்கல்தன்மை அதிகரித்து, கட்டிடக்கலை, எப்பொழுதுமில்லாதபடி பல்துறைசார்ந்த ஒன்றாக ஆனது. இதனால், கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்களின் உருவாக்கத்துக்கு, பல உயர்தொழில் நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு தேவைப்பட்டது. ஆரம்... |
மனித இனத்தின் உற்பத்திகளிலே, எக்காலத்திலும், மிகக் கூடிய அளவு பார்வைக்குத் தெரிகின்றவை கட்டிடங்களேயாகும். இருந்தும், அவற்றுட் பெரும்பாலானவை, சாதாரண மக்களினாலேயோ அல்லது வளரும் நாடுகளிலுள்ளதுபோல், கொத்தனார்களாலேயோ கட்டப்படுகின்றன. வளர்ந்த நாடுகளிலே தரப்படுத்தப்பட்ட (standardised) உற்பத்திமுறைகள் மூலம் பெருமளவு கட்டிடங்கள... |
கட்டிடங்களின் பட்டியல் |
பிரபலமான அல்லது குறிப்பிடத்தக்க கட்டிடங்கள்: |
கட்டடக் கலைஞர் |
ஒரு கட்டிடக்கலைஞன் அல்லது கட்டிடச்சிற்பி ("Architect") என்பவன் கட்டிடத் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டிட நிர்மாண மேற்பார்வை என்பவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவனாவான். கட்டிடக்கலையைப் பார்க்கவும். கட்டிடக்கலைஞர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் பொறியியலாளர்களைப்போல உயர்தொழில் வல்லுனர்களாகக் கணிக்கப்படுகிறார்கள். ஒ... |
முற்காலத்தில் கட்டிடக்கலைஞர்கள், திட்டமிடல், வடிவமைப்பு, மேற்பார்வை மட்டுமின்றி, தாங்களே முன்னின்று கட்டிடவேலைகளில் ஈடுபட்டார்கள். பழங்காலக் கட்டிடங்களிலே சிற்பவேலைப்பாடுகள் மிக முக்கிய இடத்தை வகித்தபடியால், இவர்களும் சிற்பிகள் என்றே அழைக்கப்பட்டார்கள். |
பல நாடுகளிலே, கட்டிடக்கலைஞர்கள் தொழில்புரிவதற்கு அனுமதி பெற்றிருக்கவேண்டும். தொழில் முறையில், கட்டிடக் கலைஞர் ஒருவரின் தீர்மானங்கள் பொதுப் பாதுகாப்பைப் பாதிக்கக் கூடியவை. அதனால், உயர்நிலைக் கல்வியையும், செய்முறை அனுபவத்தையும் உள்ளடக்கிய சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கும் ஒருவருக்கே கட்டிடக்கலைத் தொழிலில் ஈடுபடுவதற்கான அன... |
இங்கு தரப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் அவர்களுடைய முக்கியமான வேலைகளின் காலப்பகுதியைத் தழுவி, காலஒழுங்கு அடிப்படையிலும், அக் காலப்பகுதியினுள் அகரமுதல் அடிப்படையிலும் உள்ளது. |
<doc id="17" url="https://ta.wikipedia.org/wiki?curid=17" title="குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல்"> |
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் |
குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் |
புவியியல் |
புவியியல் என்பது புவி, அங்குள்ள நிலம், பல்வேறு அம்சங்கள், அதிலுள்ள உயிர் வகைகள் மற்றும் தோற்றப்பாடுகள் என்பவற்றை விளக்கும் ஒரு துறையாகும். இச்சொல்லை நேரடியாக மொழி பெயர்க்கும்போது அது புவியைப்பற்றி விளக்குவது அல்லது எழுதுவது என்பதைக் குறிக்கும். புவியியல் ஆய்வில் வரலாற்று ரீதியாக நான்கு மரபுகள் காணப்படுகின்றன. இவை, |
ஆனால், தற்காலப் புவியியல், எல்லாவற்றையும் ஒருங்கே தழுவிய ஒரு துறை. இது புவியையும் அதிலுள்ள எல்லா மனித மற்றும் இயற்கைச் சிக்கல்களையும் புரிந்துகொள்ள முயல்கிறது. எங்கெங்கே பொருள்கள் இருக்கின்றன என்பதை மட்டுமன்றி, அவை எவ்வாறு மாறுகின்றன, எப்படித் தற்போதைய நிலையை அடைந்தன என்பவற்றை அறிவது தற்காலப் புவியியலின் நோக்கமாகும். ம... |
முன்னர் புவியியலாளர்களை, நிலப்பட வரைவாளர்களைப் போலவும், இடப்பெயர்களையும் அவற்றின் எண்ணிக்கைகளையும் ஆய்வு செய்பவர்களைப் போலவுமே மக்கள் நோக்கி வந்தனர். பல புவியியலாளர்கள், புவிப்பரப்பியல், நிலப்பட வரைவியல் போன்ற துறைகளில் பயிற்சி பெற்றிருப்பினும், அவர்களின் முதன்மையான பணி அதுவல்ல. புவியியலாளர்கள், தோற்றப்பாடுகள், செயல்மு... |
புவியியலின் இரண்டு பிரிவுகளுள், மானிடப் புவியியல், பெரும்பாலும் கட்டிடச் சூழல் பற்றியும்; அவற்றை எவ்வாறு மனிதர்கள் உருவாக்குகிறார்கள், நோக்குகிறார்கள், மேலாண்மை செய்கிறார்கள், அவற்றின் மீது செல்வாக்குச் செலுத்துகிறார்கள் என்பது பற்றியும் ஆய்வு செய்கிறது. இரண்டாவது வகையான இயற்கைப் புவியியல், காலநிலை, தாவரவகை, பிற உயிர்வ... |
இயற்கைப் புவியியல், புவியியலை புவி பற்றிய அறிவியல் என்ற வகையிலேயே நோக்குகிறது. இது பூமியின் தளக்கோலம் ("layout"), கற்கோளம் ("lithosphere"), நீர்க்கோளம் ("hydrosphere"), வளிமண்டலம், மேலோட்டுக் கோளம் (pedosphere), அதன் காலநிலை மற்றும் தாவர விலங்கினத் தொகுதிகள் பற்றிப் புரிந்து கொள்ள முயல்கிறது. இயற்கைப் புவியியலைப் பின்வ... |
மானிடப் புவியியல் என்பது புவியியலிலிருந்து கிளைத்த ஒரு துறையாகும். இது மனிதனுக்கும், பல்வேறுவகையான சூழல்களுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்குகின்ற வடிவுருக்களையும் ("patterns"), வழிமுறைகளையும் பற்றி ஆராய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் ஆய்வுப் பரப்பு, மனிதன், அரசியல், பண்பாடு, சமூகம் மற்றும் பொருளாதார அம்சங்களை உள்ளட... |
மானிடப் புவியியல் பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். |
மானிடப் புவியியலின் துணைப்பிரிவுகள் பலவற்றுக்கும் இடையிலான வேறுபாடுகள் பொதுவாகத் தெளிவற்ற நிலையிலேயே இருப்பதால் மேலே தரப்பட்டுள்ள பட்டியல் ஒரு முடிவான பட்டியல் அல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும். |
சூழற் புவியியல், புவியியலின் ஒரு கிளைத் துறை. இது மனிதருக்கும், இயற்கை உலகுக்கும் இடையிலான தொடர்புகளின் இடம் சார்ந்த அம்சங்களையும், சூழலை எவ்வாறு மனிதர் கருத்துருவாக்கம் செய்கிறார்கள் என்பதையும் விளக்குகிறது. மானிடப் புவியியலும், இயற்கைப் புவியியலும் கூடிய அளவில் சிறப்பாக்கம் பெற்று வருவதன் விளைவாக, இவ்விரண்டுக்கும் இட... |
புவித்தகவற்கணியவியல் ("Geomatics") என்பதும் புவியியலின் ஒரு கிளைத்துறை. 1950களின் நடுப்பகுதியில், புவியியலில் கணியப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து, இத்துறை உருவானது. நிலப்படவரைவியல், நிலவுருவவியல் ஆகிய துறைகளில் பொதுவாகப் புழங்கும் நுட்பங்களையும், அவற்றைக் கணினியில் பயன்படுத்தும் முறைகளையுமே புவித்தகவற்கணியவியல் பயன்படுத்த... |
மண்டலப் புவியியல் ("Regional geography"), புவியியலின் ஒரு கிளைத்துறை. இது புவியில் உள்ள எல்லா அலவிலான மண்டலங்களையும் பற்றி ஆய்வு செய்கிறது. இது விளக்கும் இயல்பு கொண்ட ஒரு துறை. இதன் முக்கிய குறிக்கோள், ஒரு மண்டலத்தின், இயற்கை மற்றும் மனிதக் கூறுகள் உட்பட்ட, இயல்புகளை அல்லது சிறப்புத்தன்மையைப் புரிந்துகொள்வது அல்லது வரை... |
புவியியல் பொதுவாகப் புவி தொடர்பானதே ஆனாலும், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களைப் போன்ற பிற கோள்களை ஆய்வு செய்வதற்கும் இதனைப் பயன்படுத்த முடியும். புவியைக் காட்டிலும் பெரிய தொகுதிகள் பற்றிய ஆய்வு பொதுவாக வானியல், அண்டவியல் ஆகிய துறைகளுக்கு உட்பட்டது. பிற கோள்களை ஆயும் துறை கோளியல் ("planetology") எனப்படும். |
மிலேட்டஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த அனக்சிமாண்டர் (கிமு 610 - கிமு 545) என்பவரே புவியியல் துறையை நிறுவியவர் என பிற்காலக் கிரேக்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவருடைய எண்ணங்கள் பற்றிப் பிற நூல்களில் குறிப்பிட்டிருப்பது தவிர இவரது ஆக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தொடக்ககாலத்தில் நிலநேர்க்கோட்டை அளப்பதற்குக் கிரேக்கர்கள் பய... |
புவியியலை ஒரு அறிவியலாகவும், தத்துவமாகவும் கருதி முதன்முதலில் ஆராய்ந்தவர்கள் கிரேக்கர் ஆவர். இவர்கள் இதனை, நிலப்படவரைவியல், மெய்யியல், இலக்கியம், கணிதம் போன்ற துறைகளூடாகச் செய்தனர். புவி கோள வடிவானது என்பதைக் கண்டு பிடித்தது யார் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. இது, பாராமெனிட்ஸ் ("Parmenides") அல்லது ஆக்கிமிடீசாக இரு... |
புதிய நாடுகளைத் தேடிப்போன ரோமர்கள் புவியியல் ஆய்வில் புதிய நுட்பங்களைப் புகுத்தினார்கள். மத்திய காலங்களில், இத்ரிசி, இபின் பட்டுடா, இபின் கால்டுன் போன்ற அராபியர்களும் கிரேக்க மற்றும் ரோமன் நுட்பங்களைப் பயன்படுத்தியதோடு அவற்றை மேலும் விருத்தி செய்தனர். |
மார்க்கோ போலோவின் பயணங்களைத் தொடர்ந்து புவியியல் பற்றிய ஆர்வம் ஐரோப்பா எங்கும் பரவியது. 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற நாடுகாண் கடற் பயணங்கள் அச்சொட்டான புவியியல் விபரங்களையும், புவியியல் சார்பான கோட்பாட்டு அடிப்படைகளையும் பெற்றுக்கொள்வதில் புதிய ஆர்வத்தை உருவாக்கின. இக்காலப்பகுதி பெரிய புவியியற் கண்... |
இடஞ்சார் ஊடு தொடர்புகள் புவியியலுக்கு முக்கியமான அம்சங்களாக இருப்பதால், நிலப்படங்கள் ("maps") இத்துறைக்கு இன்றியமையாத கருவிகளாக அமைந்துள்ளன. இத்துறையில் நீண்ட காலமாக வழக்கிலிருந்துவரும் நிலப்பட வரைவியலுடன், நவீன புவியியல் பகுப்பாய்வுக்கு உதவியாகக் கணினி சார்ந்த புவியியற் தகவல் முறைமையும் ("geographic information system... |
தமிழகத்தில் புவியியல், வரைபடம், நேரம் கணக்கீடு தொடர்பான பாடங்களை புதிய முறையில் 35 லட்சம் மாணவர்களுக்குக் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டது. இந்த புதுமுறைக் கல்விமுறை மூலம் கற்ற மாணவர்கள் தாங்களாகவே தங்கள் அமைவிடத்திற்கும் வெளிநாடுகளுக்கும் உள்ள நேர வித்தியாசத்தைக் கணக்கிட முடி... |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) |
இது உலக நாடுகளின் ஒரு அகரமுதற் பட்டியலாகும். நீங்கள் நாடுகளை தலைநகரம்வாரியாகவோ, கண்டங்கள் வாரியாகவோ, மக்கள்தொகை வாரியாகவோ, பரப்பளவு வாரியாகவோ, மக்கள்தொகை அடர்த்தி வாரியாகவோ, நேர வலயம் வாரியாகவோ கூட உலவலாம். |
மேலதிக மூலங்களுக்கு புவியியல் குறிப்புகளைப் பார்க்கவும். |
இங்கு பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளின் நிலைமை / இறைமை பற்றிய விபரங்கள். |
கிறித்தோபர் கொலம்பசு |
கிறித்தோபர் கொலம்பசு ("Christopher Columbus") (1451–1506) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. |
எசுப்பானியப் பேரரசின் கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியில் கொலம்பசு நான்கு கடற்பயணங்களை அத்திலாந்திக்கு பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டுள்ளார். இந்தக் கடற்பயணங்களும் லா எசுப்பானியோலா தீவில் இவர் நிரந்தரக் குடியேற்றம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் "புதிய உலகம்" என அழைக்கப்பட்ட அமெரிக்காக்களில் எசுப்பானிய குடியேற்றத்தைத் துவக... |
புதிய வணிக வழிகளைக் கண்டறிந்து குடியேற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற மேற்கத்திய பேரரசுவாத போக்கு மற்றும் ஐரோப்பிய இராச்சியங்களிடையேயான பொருளியல்நிலை போட்டியில் கிழக்கத்திய இந்தியாவை எட்ட கொலம்பசு மேற்கில் பயணித்து உலகைச் சுற்றி இந்தியாவை அடைய முன்மொழிந்தார். இதற்கு எசுப்பானிய அரசரின் ஆதரவைப் பெற்ற கொலம்பசு 1492இல் மேற... |
கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் ஐரோப்பியரல்லர்; 11வது நூற்றாண்டிலேயே லீப் எரிக்சன் தலைமையேற்ற நோர்சு குழு வட அமெரிக்காவில் இறங்கியுள்ளது.) இருப்பினும் இவரது கடற்பயணங்களே அமெரிக்காக்களுடனான ஐரோப்பாவின் முதல் நிரந்தர தொடர்பை ஏற்படுத்தியது; இவற்றை அடுத்தே பல நூற்றாண்டுகளுக்கு ஐரோப்பியர்களின் நாடுகாணுதல், கைப்பற்றுதல், க... |
இதுவரை ஐரோப்பியர்கள் கண்டறியாத புதிய கண்டத்தை வந்தடைந்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ளாத கொலம்பசு இங்கு வாழ்ந்திருந்த மக்களை "இன்டியோசு" ("இந்தியர்களுக்கான" எசுப்பானியச் சொல்) என்றே அழைத்தார். அமெரிக்காவில் குடியேற்றப்பகுதிகளுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமித்தது தொடர்பான எசுப்பானிய பேரரசருடனான பிணக்கு காரணமாக 1500இல் லா எசுப... |
கொலம்பசு ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது இந்தியா என்றே நம்பினார். |
கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும். |
உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் இல்லை . ஏனென்றால் அங்கே ஏற்கனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடிய... |
கொலம்பசு இத்தாலியின் துறைமுக நகரான ஜெனோவாவில் 1451-ல் பிறந்தார். |
அவருடைய தந்தை டொ மினிகோ கொலம்போ, ஒரு கம்பளித்துணி வியாபாரி. தாய் சுசான்னா போன்டனாரோசா. கொலம்பசிற்கு மூன்று சகோதரர்கள்,ஒரு சகோதரி. |
1471-இல் கொலம்பசு எசுபெனோலா ஃபினான்சியர்சு நடத்திய ஒரு கப்பலில் சேர்ந்தார். அவர் கியோஸ் கியோசு (ஏஜியன் கடல்-இல் உள்ள ஒரு தீவு) பகுதியைச் சுற்றி வந்த அக்கப்பலில் ஒரு வருடம் வேலை செய்தார். சில நாட்கள் நாடு திரும்பிய |
பின் மறுபடியும் கியோசுப் பகுதியில் மற்றோர் ஆண்டு வேலை செய்தார். இக்கால கட்டத்தில் ஏகயன் துருக்கியர் வசம் இருந்தது(இவர்கள் கான்ஸ்டான்டினோபில்-ஐ மே 29, 1453 இல் கைப்பற்றியிருந்தனர்). |
1476-இல் கொலம்பசு ஒரு வணிகப் பயணத்தை அட்லாண்டிக் கடலின் மீது மேற்கொண்டார். இந்தக் கப்பல் கேப் ஆஃப் செயின்ட் வின்சென்ட் இன் பிரெஞ்சு பிரைவெட்டீயெர்ஸ்-ஆல் தாக்கப்பட்டது. கொலம்பஸ் கப்பல் எரிந்து போய் அவர் ஆறு மைல்கள் நீந்திக் கரை சேர்ந்தார். |
1477-இல் கொலம்பசு லிஸ்பன் நகரில் வாழ்ந்தார். போர்த்துக்கல் கடல் தொடர்பான நடத்தைகளுக்கு ஒரு மையமாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஐசுலாந்து, மடீயெரா, த அசோர்சு, ஆப்பிரிக்காக்குச் செல்லும் கப்பல்களுடன் விளங்கியது. கொலம்பசின் உடன்பிறந்தார் பார்த்தலோமியோ லிசுபனில் ஒரு வரைபடங்களை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவ்வமயம் இவ... |
கொலம்பசு வணிகக் கடற்பயணியாக போர்ச்சுகீசிய கப்பல்களில் மாறினார். 1477-ல் ஐசுலாந்துக்கும், 1478-இல் மடியெராவிற்கும் சர்க்கரை வாங்கவும், மேற்கு ஆப்பிரிக்க கடலோரங்களுக்கு 1482லும் 1485-இலும், போர்ச்சுகீசிய வணிக எல்லையான ஸாவோ ஜார்ஜ் டா மைனா என்ற கினியாக் கரைக்கும் சென்றார். |
கொலம்பசு பிலிப்பா பெரெசிட்டெல்லோ எ மோனிசு என்ற போர்ச்சுகீசியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்(1479-இல்). அவர்களுக்கு தியெகோ என்ற ஒரு மகன் பிறந்தான். பிலிப்பா 1485-இல் காலமானார். கொலம்பசு பின்னர் பீட்ரிஸ் என்ரிகுவெசு என்ற பெண்ணைத் திருமணம் செய்து (1488-இல்) கொண்டார். அவர்களுக்கு பெர்டினான்ட் என்ற மகன் பிறந்தான். |
கொலம்பஸின் தாய் நாடு பற்றிய உறுதியான விவரம் இன்னும் தெரியவில்லை.பொதுவாக அவர் இத்தாலியில் உள்ள ஜெனொவாவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். 1470க்கு முன்னரான கொலம்பஸின் வரலாறு சரியாக அறியப்படவில்லை.தன் வாழ்விலுள்ள ஏதோ ஒரு மர்மத்தைக் காப்பதற்காகவே, தன் தாய் நாடு பற்றிய விவரங்களை ரகசியமாக வைத்திருந்தார் என்று கூறுவோரும் உ... |
தேசிய உணர்வுகளின் எழுச்சிக்குப் பின்னரே,கொலம்பஸின் தாய் நாடு பற்றிய உண்மை விவாதத்திற்குரியதானது; கொலம்பஸ் கண்டுபிடிப்புகளின் ஐநூறாவது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் 1892ல் நடந்தது; அதுவரை கொலம்பஸின் தாய் நாடு பற்றிய சர்ச்சை இருந்ததில்லை.அவர் ஜெனோவா நாட்டைச் சேர்ந்தவர் என்பது இத்தாலிய அமெரிக்கர்களுக்கு பெருமைக்குரிய விடயமாக இர... |
சில பாசுக்கு வரலாற்று ஆய்வாளர்கள் கொலம்பஸ் பாசுக்கைச் சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், அவர் கிறித்தவ சமயத்திற்கு மாறிய எசுப்பானிய யூதர் என்றும், யூத சமயத்தை ரகசியமாக பின்பற்றும் பல எசுப்பானிய யூதர்களைப் போல அவரும் பின்பற்ற எண்ணி தன் தாய் நாடு பற்றிய விவரங்களை மறைத்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். வேறு சி... |
1480-இல், கொலம்பசு மேற்காக அட்லாண்டிக் ஊடாக இண்டீசுவிற்கு (குத்து மதிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு (ஆசியா) ) செல்வதற்கு ஒரு திட்டத்தை வகுத்தார். இது தெற்கு மற்றும் கிழக்கு வழியாக (ஆப்பிரிக்கா) செல்வதைவிட விரைவான வழி என்று அவர் நம்பினார். இத்திட்டத்திற்கு அவர் உதவி பெறுவது மிகக் கடியதாக இருந்ததாகத் தெரிகிறது(ஏனென்றால் அப... |
1492க்கும் 1503க்கும் இடையே கொலம்பசு எசுப்பானிவிலிருந்து நான்கு முறை அமெரிக்காக்களுக்கு பயணித்துள்ளார். இந்த நான்கு பயணங்களுக்கும் காசுட்டில் இராச்சியமே புரவலளித்தது. இவை ஐரோப்பியக் கண்டுபிடிப்பு காலத்திற்கும் அமெரிக்கக் கண்டங்களின் குடிமைப்படுத்தலுக்கும் துவக்கமாக அமைந்தன. எனவே இவை மேற்கத்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்... |
சான்றுகள் எதிராக இருந்தபோதிலும் கொலம்பசு எப்போதும் தாம் கண்டறிந்த நிலப்பகுதிகள் மார்க்கோ போலோவாலும் பிற ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளாலும் விவரிக்கப்பட்ட ஆசியாவைச் சேர்ந்தவை என்றே உறுதியாக இருந்தார். இந்த மறுப்புதான் புதிய கண்டங்களுக்கு இவர் பெயரை வைக்காது பிளாரென்சின் தேடலாய்வாளர் அமெரிகோ வெஸ்புச்சியின் பெயரை ஒட்டி "அமெரி... |
கொலம்பசு முதலில் தன்னுடைய திட்டத்தை போர்ச்சுக்கல் அரச சபையில் 1485-இல் தெரிவித்தார். ஆனால் அரசரின் நிபுணர்கள் கொலம்பசின் வழி கொலம்பசு நினைப்பதை விடப் பெரியது என நம்பினர். அதனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். கொலம்பசு பின்னர் எசுப்பானியா அரசவையை நாடினார். ஆனால் பல நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட பின்னர் 1492-இல் அவர்கள... |
அவ்வாண்டு ஆகத்து 3 அன்று, கொலம்பசு பாலோசில் இருந்து மூன்று கப்பல்களில் சாண்டா மரியா, நின்யா, பின்டா புறப்பட்டார். முதலில் அவர் கேனரித் தீவுகளை அடைந்தார். அங்கே ஒரு மாதம் தங்கினார். பின்னர் பெரும் பயணத்தைத் துவக்கினார். அவர் தன்னுடைய குறிப்பேடுகளில் தான் பயணித்த தூரத்தை விடக்குறைவான தூரத்தையே பதிவு செய்து தன்னுடைய மாலும... |
அவர் அங்கிருந்த அமெரிக்கப் பழங்குடிகளை எதிர்கொண்டார். அவர்கள் டையனோ அல்லது ஆராவாக், மிகவும் அமைதியானவர்களாகவும், நட்புணர்வுடனும் விளங்கினர். |
அக்டோபர் 14, 1492 குறிப்பில் கொலம்பசு எசுப்பானியாவின் அரசர் பெர்டினான்டு, அரசி இசபெல்லா ஆகியோருக்கு டையாகுட்;நோ பற்றி பின்வருமாறு எழுதினார். |
கொலம்பசு அவருடைய முதல் பயணத்தில், கியூபாவிலும், லா எசுப்பானியோலா விலும் பயணத்திருந்தார்(அக்டோபர் 28-இல்).சாண்டா மரியா தரை தட்டியதால், அதை அவர் கைவிட வேண்டியதாயிற்று. கொலம்பசு லா நாவிடாட் என்ற குடியேற்றத்தை அங்கே அமைத்து அங்கே தன்னுடன் வந்த 39 பேரை விட்டு விட்டார். |
சனவரி 4, 1493-இல் அவர் நாடு திரும்பப் பயணப்பட்டார்.ஆனால், புயல் காரணமாக அவர் போர்ச்சுகல்லில் இறங்க வேண்டியதாயிற்று. அப்போது போர்ச்சுகல்லுக்கும், காஸ்டைலுக்குமான உறவு மிகவும் மோசமாக இருந்த படியால் அங்கே அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் மார்ச் 15-இல் அவர் எசுப்பானியாவை அடைந்தார். |
அங்கே அவர் தான் கொண்டு வந்த தங்கம் மற்றும் கொண்டு வந்த அமெரிக்கப்பழங்குடிகள் ஆகியவற்றை அரசவையில் ஒப்படைத்தார். அங்கே அதுவரை அறியப்படாதிருந்த புகையிலையையும், அன்னாசியையும் அன்னாக்கு ஆகியவைகளைப்பற்றி அங்கே விளக்கினார். அங்கே அவர் ஒரு மாவீரராக வரவேற்கப்பட்டார். அவருடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி உலகெங்கும் பரவியது. |
அவர் தனது இரண்டாம் பயணத்தை (1493–1496)-இல் செப்டெம்பர் 24 1493-இல் துவக்கினார். டையனோ ஆதிவாசிகளை வசப்படுத்தவும், அத்தீவுகளைக்குடியேற்ற நாடுகளாக்கவும் 17 கப்பல்களில்,1200 பேருடன் வேண்டிய கருவிகளுடன் கிளம்பினார். |
இந்த முறை அவர் முன்னைவிட தெற்காகச் சென்றார். முதலில் டொமினிக்கா-வையும், பின்னர் |
வடக்காகக் கிளம்பி, குவாடெலோப், மோன்ட்செர்ராட், ஆன்டிகுவா மற்றும் நேவிஸ் ஆகிய சிறிய ஆன்டில்லெஸ்-இல் உள்ள தீவுகளைக் கண்டறிந்து அவற்றிற்கு அப்பெயர்களைச் சூட்டினார். அத்தீவுகளில் இறங்கி அவற்றை ஸ்பெயினின் பகுதிகளாக கன்னித் தீவுகள் மற்றும் பியுர்டோ ரிகோ போல தானே கூறிக்கொண்டார். பின்னர் அவர் லா எசுப்பானியோலா-விற்குச்சென்று, அ... |
அமைத்தார். ஆனால் இங்கே இவர் நினைத்தது போல தங்கம் அவ்வளவாகக்கிட்டவில்லை. பின்னர் இவர் இசபெல்லாத்தீவின் உட்பகுதியில் தங்கத்தைத்தேடி சிறிது கிடைப்பதை அறிந்தார். அங்கே ஒரு சிறு கோட்டையைக் கட்டினார். கியூபா-வின் தென் கடற்கரையில் பயணித்து, பின்னர் அது ஒரு தீபகற்பம், தீவு அல்ல என்பதை அறிந்தார். பின்னர் ஜமைக்காவைக் கண்டுபிடித்... |
தன்னுடைய இரண்டாம் பயணத்தின் போது பெர்டினான்ட் மற்றும் இஸபெல்லாவினால் அங்குள்ள குடிகளிடம் நட்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆனால் கொலம்பஸ் தன் இரண்டாம் பயணத்தில் அரசருக்கு ஒரு கடிதம் அனுப்பி அங்குள்ள குடிகளை அடிமைப்படுத்த உரிமை வழங்குமாறு கேட்டார். ஏனென்றால் கரிப்-இலிருந்த குடிகள் முரடர்களாக இருப்பதாக அவர்... |
கொலம்பசின் பயணத்தின் மிக முக்கியக் குறிக்கோள் தங்கமே. அதற்காக எயிட்டி-இலுள்ள சிகாவோ தீவுகளில் இருந்த குடிகளை ஒரு திட்டத்திற்கு ஆட்படுத்தினார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தங்கத்தைக் கொண்டு வரவேண்டுமென்று அவர்களை மிரட்டினார். அவ்வாறு கொண்டு வராதவர்களின் கைகள் வெட்டப்படும் என்றும் மிரட்டினார்.அப்படியிருந்தும் அவ... |
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 3